தொழில்நுட்பம்
Google Chrome வெளியிட்ட Update…!!!

Google Chrome வெளியிட்ட Update…!!!
இணைய உலகில் மிகவும் பிரபலமான web browser ஆக கூகிள் நிறுவனத்தின் Google Chrome காணப்படுகின்றது. Google chrome செயலின்வினைத்திறனை மேம்படுத்தும் பொருட்டு பல புதிய அம்சங்களை வெளியிட்டவண்ணமுள்ளனர்.
கூகிள் நிறுவனமானது இதுவரை Google Chrome இல் காணப்பட்ட Downloads Bar இனை நீக்கிவிட்டு, வலதுபக்க மேல் மூலையில் பார்க்கக்கூடிய மாதிரி மாற்றம் செய்து இருந்தார்கள். இது கடந்தவாரம் உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து பயனர்களுக்குமாக மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த புதிய இட அமைவினை பலர் ஏற்றுக்கொண்டாலும் சிலருக்கு சிக்கலானதாகவும் குழப்பகரமானதாக இருக்கின்றது. Google Chrome இல் Download Bar இனை எவ்வாறு மீளவும் கொண்டுவரலாம் என்று பார்ப்போம்.
Google Chrome இன் search bar சென்று chrome://flags/#download-bubble என்பதை தட்டச்சு செய்து Enter செய்யும் போது கீழ் உள்ளவாறான ஒரு Experiment Feature தோன்றும் அதனை Enable செய்துகொள்வதன் மூலம் பழையதைப்போன்று உங்களால் Downloads Bar இனை Google Chrome இல் பார்வையிட முடியும். இது எப்போது வேண்டுமானாலும் கூகிள் நிறுவனத்தால் நீக்கப்படலாம் அல்லது மாற்றியமைக்கப்படலாம்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: Google Recorder செயலியில் செயற்கை நுண்ணறிவு…!!! - tamilnaadi.com
Pingback: கூகிள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு. Passkeys இனை பயன்படுத்த ஊக்கப்படுத்தும் Google நிறுவனம். - tamilnaadi.com