Apple பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.
அப்பிள் நிறுவனமானது தனது மடிக்கணனி மற்றும் கணனியான MacBook, Macs என்பவற்றை M3 chip உடன் வரும் October மாத ஆரம்பத்தில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
Apple M1 series என்பது ARM தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட SOC(System on chip) ஆகும். மின்சார பாவனை மற்றும் அதீத திறன் என்பவற்றின் மூலம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுக்கொண்டது. கடந்த வரும் M2 chip வெளிவந்ததுடன் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் அடுத்த பதிப்பான M3 chip உடன் MacBook, Macs கணனிகள் வெளியாகும் என்று Mark Gurman டுவிட்டர் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது CPU இன் திறன், அளவு என்பவற்றில் மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a comment