தொழில்நுட்பம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐபோன்களுக்கு சிறப்பு சலுகை!


ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிக் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், மின்னணு சாதனங்கள் என ஏராளமான பொருட்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.
இதன்படி ஆப்பிள் இந்தியா ஸ்டோர் வலைதளத்தின் படி ஐபோன் 13 விலை தற்போது ரூ. 69 ஆயிரத்து 990 என துவங்குகிறது.
இந்த நிலையில், ஐபோன் 13 விலை மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மேலும் குறைந்துள்ளது.
அந்த வகையில் ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 விலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக ஐபோன் 13 விலை தற்போது ரூ. 59 ஆயிரத்து 990 என துவங்குகிறது. இத்துடன் பாரத ஸ்டேட் வங்கி கார்டுகளுக்கு ரூ. 1250 உடனடி தள்ளுபடி, ரூ. 16 ஆயிரத்து 900 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக ஐபோன் 13 விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 42 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலை தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் சலுகைகளை சேர்த்த பின் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.