தொழில்நுட்பம்
விரைவில் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ்! இந்த அம்சம் உள்ளதா?


இந்திய சந்தையில் புதிய ஒன்பிளஸ் 10R பிரைம் புளூ எடிஷன் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 22 ஆம் திகதி விற்பனைக்கு வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலின் போது இந்த மாடல் விற்பனைக்கு வருகிறது.
அமேசான் மட்டுமின்றி ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
புதிய பிரைம் புளூ எடிஷன் ஒன்பிளஸ் 10R அனைத்து வேரியண்ட்களிலும் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஆக்சிஜன் ஒஎஸ் 12, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டிமென்சிட்டி 8100 மேக்ஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.