தொழில்நுட்பம்

விலையுயர்ந்த லேப்டாப்பை அறிமுகம் செய்தது டெல் நிறுவனம்! என்ன விலை தெரியுமா?

Published

on

டெல் நிறுவனம் அதன் டெல் எக்ஸ்.பி.எஸ். 13 ப்ளஸ் 9320 எனும் பெயர்கொண்ட புதிய லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன்படி கோர் i5-1260P, 16ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் இதன் பவர்ஃபுல் வேரியண்டான கோர் i7-1260P, 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட் விலை ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாளை முதல் அமேசான் தளத்திலும், டெல் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த லேப்டாப் விற்பனைக்கு வர உள்ளது.

சிறப்பம்சங்கள்

  • அதன்படி இதன் பாடி மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டு உள்ளது.
  • மிகவும் மெல்லிய தோற்றம் கொண்ட இந்த லேப்டாப் 1.24 கிலோ எடை கொண்டதாகும்.
  • 4K ரெசொல்யூசனுடன் கூடிய 13 இன்ச் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்று உள்ளது.
  • 91.9 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேசியோ கொண்ட இந்த லேப்டாப்பின் நான்கு பக்கங்களிலும் ஸ்லிம் பெசில்கள் உள்ளன.
  • இதில் இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் உடன் கூடிய இண்டெல் கோர் i7-1260P சிபியு இடம்பெற்றுள்ளது.
  • 16 ஜிபி ரேமும் 1டிபி ஸ்டோரேஜும் இதில் வழங்கப்படுகிறது.
    டூயல் சென்சார் உடன் கூடிய ஹெச்டி வெப் கேமரா, கைரேகை சென்சார் மற்றும் 4 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
  • இதில் எக்ஸ்பிரஸ் சார்ஜ் வசதியும் உள்ளது. அதன்மூலம் இதில் உள்ள 55 வாட் ஹவர் பேட்டரியை 1 மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்ய முடியுமாம்.

#Dell #Laptop #Technology

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version