கட்டுரை

அமேசான் தளத்தில் வந்தது ஹானரின் புது ஸ்மார்ட்வாட்ச் – விலை எவ்வளவு தெரியுமா?

Published

on

ஹானர் நிறுவனத்தின் GS 3 ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது.

ஹானர் வாட்ச் GS 3 மாடலின் விற்பனை அமேசான் தளத்தில் இன்று முதல் (ஜூன் 7) துவங்கி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட் வாட்ச் மிட்நைட் பிளாக், ஓசன் புளூ மற்றும் கிளாசிக் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

இதன் விலை இந்திய மதிப்புப்படி ரூ. 12 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் இன்று முதல் துவங்கியுள்ளது.

இந்த புதிய ஹானர் வாட்ச் GS 3 மாடலில் பல்வேறு உள்ளடக்கியுள்ளது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சிறப்பம்சங்கள்

டிஸ்பிளேவை 1.43 இன்ச் AMOLED ஸ்கிரீன் மற்றும் 3D வளைந்த கிளாஸ்
100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோடுகள்
10-க்கும் அதிகமான ப்ரோபஷனல் ஸ்போர்ட்ஸ் மோடுகள்
85 பிரத்யேக ஸ்போர்ட்ஸ் மோடுகள்
5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
8 சேனல் PPG சென்சார் மாட்யுல் உள்ளது.
இதுதவிர AI ஹார்ட் ரேட் சென்சார்
பயனர்களின் ஸ்லீப், ஸ்டிரெஸ் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் சென்சார்
ப்ளூடூத் காலிங் அம்சம்
முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை பயன்படுத்தக்கூடிய திறன்
மேலும் 32MB ரேம், 4GB இண்டர்னல் மெமரி
கைரோஸ்கோப் சென்சார்
அக்செல்லோமீட்டர் சென்சார்
ஆம்பியன்ட் லைட் சென்சார், ஏர் பிரெஷர் சென்சார், மைக்ரோபோன், ஸ்பீக்கர்
ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஐ.ஓ.எஸ். 9

#Technology

Exit mobile version