செவ்வாய் கிரகத்திற்கு செல்ல பயிற்சி எடுக்கும் நால்வர்!

tech

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் பணியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

செவ்வாய் கிரகத்திற்கு சென்றால் அங்கு மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கும் பணியையும் விஞ்ஞானிகள் தொடங்கி விட்டனர்.

இதற்காக பூமியில் செவ்வாய் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி அங்கு மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும், அவர்கள் சமைப்பது எப்படி என்பது உள்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

தற்போது 4 மனிதர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக நாசா தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

#world

Exit mobile version