NASA வானியலாளர்கள் ஆபத்தான சிறுகோள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறுகோள் இன்று (ஜூலை 7) பூமியை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 அடி அகலம் கொண்ட இந்த சிறுகோள் ஜூலை 4 ஆம் திகதி தான் அடையாளம் காணப்பட்டது.
நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், இந்த சிறுகோளின் பாதையை கவனித்து வருகிறது.
இந்த சிறுகோளுக்கு 2022 NF என பெயரிடப்பட்டுள்ளது. சிறுகோளானது பூமிக்கு 90,000 கிலோமீட்டர் தொலைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைவில் பயணிக்கும் இந்த சிறுகோள் பூமியின் ஈர்ப்பு விசை காரணமாக இழுக்கப்பட்டால் தான் பூமியை தாக்கக்கூடும்.
ஆனால் தற்போது சிறுகோள் பாதுகாப்பான பாதையில் பயணிக்க வாய்ப்புள்ளதாக நாசா கணித்திருக்கிறது. அதாவது ஈர்ப்பு விசை தூண்டப்பட்டால் சிறுகோள் பூமியை நோக்கி திசை திரும்பும் என்று கூறப்படுகின்றது.
#science #NASA
Leave a comment