கட்டுரைசுகாதாரம்

காலநிலை மாற்றமும் சுவாசப்பை நோய்களும்

Share
9133 COPD Facts Statistics and You 1296x728 Header
Share

இன்றைய காலகட்டத்தில் வேகமாக சுழல்ன்று கொண்டிருக்கின்ற மனித வாழ்கையில் சூழல் மாசுக்களும் காலநிலை மாற்றங்களும் ஓர் அங்கமாகிவிட்டன. உலகின் மூலை முடுக்கெங்கிலும் அதிகரித்து வரும் சூழல் சார்ந்த பிரச்சினைகளின் ஆணிவேராக திகழ்வது காலநிலை மாற்றமேயாகும்.

காலநிலை மாற்றமும் அதற்கான எமது பிரதியீடுகளும் மனித சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக மனிதனது நாளாந்த நடவடிக்கைகளின் விளைவாக ஏற்படுகின்ற பச்சைவீட்டு விளைவுஇ காலநிலை மாற்றத்திற்கான மூல காரணியாக திகழ்கின்றது.

கடந்த 50 ஆண்டுகளில் மனித நடவடிக்கைகளால், குறிப்பாக அதிகளவு எரிபொருட்களின் தகனத்தினால் வெளியிடப்படுகின்ற காபனீரொட்சைட்டு மற்றும் ஏனைய பச்சைவீட்டு வாயுக்களினால் தாழ்வு வளிமண்டலத்தின் வெப்பநிலை பல மடங்கு உயர்ந்து காலநிலை மாற்றத்திற்கு வலு சேர்க்கின்றது.

உலக சுகாதார அமைப்பினால் 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையில், கடந்த 130 ஆண்டுகளில் புவியின் வெப்பநிலை 0.85OC ஆல் அதிகரித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புவியின் வெப்பநிலை அதிகரிப்பு சிறிதளவாக இருந்தாலும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளும் பாதிப்புக்களும் பல மடங்கு பெரியது.

புவி வெப்பமடைவதால், குறைந்த குளிர்கால இறப்புக்கள் மற்றும் அதிகளவு உணவு உற்பத்திகள் போன்ற சில நன்மைகள் காணப்பட்டாலும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களே அதிகம். காலநிலை மாற்றத்தின் விளைவாக மனிதனுக்கு அத்தியாவசியமான தூய வளி, சுத்தமான குடிநீர்,போதியளவு உணவு, பாதுகாப்பான உறையுள் என்பன கேள்விக்குறியாகின்றன.

அதிகளவு வெப்பம் வளியில், ஓசோன் மற்றும் வளி மாசின் அளவை அதிகரிக்கின்றன. அதன் விளைவாக சுவாச (COPD, Asthma) மற்றும் இருதய நோய்களினால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. 2003ம் ஆண்டில் ஐரோப்பாவில் அதிகளவு வெப்பத்தினால் ஏற்பட்ட 70இ000 ற்கும் மேற்பட்ட இறப்புக்கள் இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். வளியின் மாசு மட்டுமல்லாது மகரந்தம் மற்றும் யநசழயடடநசபநn களும் அதிகளவு வெப்பத்தினால் வளியில் அதிகரிக்கின்றன. இவை ஈழை நோயை (Asthma) தூண்டக்கூடிய காரணிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

what is COPD

ஈழை நோய் (ஆஸ்துமா)
உலக சுகாதார அமைப்பின் படி 339 மில்லியன் மக்கள் ஈழை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈழை நோய் என்பது நுரையீரலில் மூச்சுக்குழாய்களில் ஏற்படும் சுருக்கத்தினால் உண்டாகும் ஒரு சுவாசக்கோளாறு ஆகும். தூசி, பூவின் மகரந்தம், விலங்குகளின் உரோமம், காற்று மாசு, வானிலை மாற்றம், உடற்பயிற்சி, சுவாசத் தொற்று போன்ற காரணிகளால் சுவாசக்குழாயில் அழற்சி ஏற்பட்டு சுவாசக்குழாயில் உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தசைகளின் சுருக்கத்தினால் சுவாசப்பாதை ஒடுங்குவதன் மூலம் இந்த நோய் ஏற்படுகின்றது.

காலநிலை மாற்றத்தினால் சூழலில் இக் காரணிகளின் அளவு பல மடங்கு அதிகரிக்கின்றது. இவ் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினையானது மரபணு வழியாகவும் பரவக்கூடியது. சுவாசப்பாதைகளில் ஏற்படும் இம் மாற்றத்தினால் சுவாசிப்பதில் சிரமம், மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல் காலப்போக்கில் நோயின் தீவிரத்தன்மை காரணமாக வழமைக்கு மாறான இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

ஈழை நோயின் அறிகுறிகள்

• சுவாசிப்பதில் சிரமம்
சுவாசக்குழாயில் ஏற்படும் ஒடுக்கம் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகின்றது. குறிப்பாக நோய் அதிகரிக்கும் போது மூச்சுத்திணறல் அதிகம் காணப்படுகின்றது.

• மூச்சுத்திணறல் (வீசிங்)
குறுகிய சுவாசப்பாதையின் ஊடாக மூச்சுக்காற்று செல்லும் போது ஏற்படும் ஒலி வீசிங் ஆகும். ஆஸ்துமா லேசாக இருக்கும் பொழுது நபரொருவருக்கு மூச்சினை வெளிவிடும் போது வீசிங் ஏற்படுகின்றது. அதே நேரம் ஆஸ்துமா கடுமையாக இருக்கும் போது மூச்சினை உள்ளெடுக்கும் போது கூட வீசிங் ஏற்படுகின்றது. ஆஸ்துமா மிகவும் தீவிரம் அடையும் போது மூச்சுக்குழாய் முற்றாக சுருக்கமடைந்து வீசிங் ஏற்படுவது நின்றுவிடுகின்றது. இருதய செயலிழப்புஇ குரல்வழை செயலிழப்புஇ சிஸ்டிக்ஃபைப்ரோசிஸ் போன்ற நோய்களிலும் வீசிங் ஏற்படும் எனவே ஆஸ்துமாவை கணடறிவது அவசியமாகும்.

• இருமல்
உலர்ந்த உற்பத்தியற்ற (சளியற்ற), இருமல் பகல் அல்லது இரவு வேளைகளில் காணப்படும். குறிப்பாக உடற்பயிற்சியினால், தூசுக்கள், மகரந்த மணிகளின், குளிர் காற்றின் தூண்டுதலினால் இருமல் ஏற்படுகின்றது.

• மார்பு இறுக்கம் அல்லது மார்பு இறுக்கம்
வலுவற்ற அல்லது கூர்மையான குத்துகின்ற மார்பு வலி காணப்படும். கூடுதலாக ஆழ்ந்த மூச்சு, இருமல் என்பவற்றின் பிற்பாடு இவ் மார்பு வலி அதிகம் ஏற்படுகின்றது.

ஈழை நோயிற்கான சிகிச்சை

விரைவான நிவாரணம்
இவ் மருந்துகள் மூச்சுக்குழாய்களின் உட்புறமுள்ள தசைகளை தளர்த்துவதன் மூலம் ஆஸ்துமாவால் ஏற்படும் அளசெகரியங்களில் இருந்து விடுவிக்கின்றது. இதற்கான முதற் தேற்வாக beta-2 agonist (பீடா-2) பயன்படுத்தப்படுகின்றது. உறிஞ்சிகளில் எடுக்கப்படும் இவ் மருந்துகள் மூச்சுக்குழாயிகளின் தசைகளிலுள்ள beta-2 ஏற்பிகளில் தொழிற்பட்டு தசைகனை தளர்த்தி உடனடி நிவாரணமளிக்கின்றன.

உதாரணம் albuterol, levebuterol

நீண்ட கால கட்டுப்பாடு

உள்ளிழுக்கப்படும் கோர்டிகோஸ்டீராய்டுகள் (Lnhaled corticosteroids)

ஈழை நோயின் நீண்டகால சிகிச்சையின் முதற் தேர்வு இதுவேயாகும். மூச்சுக்குழாய்களில் ஏற்படும் அழற்சி மற்றும் மூச்சுக்குழாய் பாதைகளிலுள்ள வீக்கங்களை குறைக்கின்றன.

உதாரணம் –

Fluticasone, Budesonide, Mometasone

உள்ளிழுக்கப்படும் கோர்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் நீண்ட நேரம் செயல்படும் beta-2 agonist

நீண்ட நேரம் செயல்படும் beta-2 agonist கள் மூச்சுக்குழாயிகளின் தசைகளிலுள்ளbeta-2 ஏற்பிகளில் தொழிற்பட்டு தசைகனை தளர்த்தி மூச்சுக்குழாய்களை திறந்து வைத்திருக்க உதவுகின்றன. இவை எப்பொழுதும் ஒரு உள்ளிழுக்கப்படும் கோர்டிகோஸ்டீராய்டுகளுடன் சேர்ந்தே பரிந்துரைக்கப்படுகின்றன.

இவற்றை தவிர லுகோட்டிரைன் ஏற்பு எதிர்ப்பிகள், மாஸ்ட் செல் நிலைப்படுத்திகள், நோய் எதிர்பு இயக்கிகள் போன்ற மருந்துகளும் மூச்சுக்குழாய் தெர்மொபிலாஸ்டி முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD)

உலக சுகாதார அமைப்பின் படி 251 மில்லியன் மக்கள் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான அழற்சி நோய்களினால் நுரையீரலின் காற்றோட்டத்தில் ஏற்படுகின்ற தொடற்சியான குறைவு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு எனப்படுகின்றது. மூச்சுக்குழாய் அழற்சி, காற்றேற்ற விரிவு என்ற இரு முன்னேற்றமடையக்கூடிய நுரையீரல் நிலைகள் இந் நோயில் காணப்படுகின்றது.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் அறிகுறிகள்

இவ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சுவாசிப்பதில் சிரமம், இருமல், அதிகப்படியான சளி, மூச்சவரைப்பு, களைப்பு, உதடுகள் அல்லது நகங்கள் நீல நிறமாக மாறுமல், அசாதாரண இடை இழப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும்.

புகைப்பிடித்தல், சுற்றாடல் வளி மாசு, வீட்டில் சமைக்கும் போது வெளிவிடப்படும் புகை போன்றன நோயை ஏற்படுத்தும் ஆபத்தான காரணிகளாகும். இதைத்தவிர மரபணுரீதியான யடிhய-1 யவெவைலிளin குறைபாடும் இவ் நோயை ஏற்படுத்தும். காலநிலை மாற்றம் குறிப்பாக குளிர்இ நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் இறப்பு விகிதத்தை கணிசமாக அதிகரிக்கின்றது. ஈழை நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை மேலும் அதிகரிக்கக்கூடியது.

நோயினை கண்டறியும் முறைகள்

  • ஸ்பைரோமெட்ரி (Spirometry)
  • மார்பு எகஸ் கதிர்கள்
  • தமணி இரத்த வாயு பகுப்பாய்வு
  • நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனைகள்

சிகிச்சை முறைகள்

  • புகைப்பிடித்தலை நிறுத்துதல்
  • மருந்துகள்
    மூச்சுக்குழாய் தளர்த்திகள் (Broncho dilators) – Albuterol, Ipratropium,  Levalbuterol
    உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டுகள் (Inhaled steroids)
    ஒருங்கிணைந்த இன்கேலர்கள் (Combined inhalers)
    பாஸ்போடைஸ்டிரேஸ்-4 எதிர்ப்பிகள் (Phosphodiesterase-4 inhibitors)
    தியோபைலின் (Theophylline)
    நுண்ணுயிர்கொல்லிகள் (Antibiotics)

• மருந்துகள் அல்லாத சிகிச்சைகள்
ஒட்சிசன் தெரபி
நுரையீரல் மறுவாழ்வு திட்டங்கள்

• அறுவைச் சிகிச்சைகள்
நுரையீரல் கொள்ளவு குறைப்பு அறுவைச் சிகிச்சை
நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...

tamilnif 27 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்! உடனடி செய்தியிடல் செயலியான வட்ஸ்அப் ஆனது செய்திகளை மேம்படுத்த புதிய...

9 6 scaled
கட்டுரைதொழில்நுட்பம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம்

டிக்-டொக்கை வீழ்த்தி இன்ஸ்டாகிராம் முதலிடம் கடந்த ஆண்டு சர்வதேச ரீதியில் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்த...