திடீரென குறைவடையும் கச்சா எண்ணெய் விலை – அமெரிக்க அதிகாரி கூறியது என்ன?

oil price down

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் குறைவடைந்துள்ளன.

அந்த அடிப்படையில், ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75 அமெரிக்க டொலராகவும் குறைவடைந்துள்ளன.

மேலும், ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் விநியோக அபாயங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Exit mobile version