2026 பெப்ரவரி: நாட்காட்டியில் ஒரு முழுமையான மாதம்! – 11 ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்துள்ள அரிய நிகழ்வு.

til february 2026 being a perfect month is a rare occurence v0

தற்போது பிறந்துள்ள 2026 பெப்ரவரி மாதம், நாட்காட்டி அமைப்பில் மிகவும் அரிதான மற்றும் நேர்த்தியான ஒரு கட்டமைப்பைக் கொண்டுள்ளதாகக் கணிதவியலாளர்களும் சமூக வலைத்தளவாசிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இம்மாதம் சரியாக 28 நாட்களைக் கொண்டுள்ளது. இது சரியாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, சனிக்கிழமையுடன் முடிவடையும் நான்கு முழுமையான வாரங்களைக் கொண்டுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு நாட்களும் (திங்கள் முதல் ஞாயிறு வரை) சரியாக நான்கு முறை மட்டுமே வருகின்றன.

நாட்காட்டியில் எந்தவொரு இடைவெளியும் இன்றி ஒரு முழுமையான செவ்வக வடிவில் காட்சியளிப்பதால், இதனை “செவ்வக மாதம்” (Rectangular Month) என்றும் அழைக்கின்றனர்.

இந்தத் தனித்துவமான அமைப்பு லீப் வருடம் அல்லாத ஆண்டுகளில், பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் போது மட்டுமே நிகழும்.

இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டில் இத்தகைய அமைப்பு உருவானது. மீண்டும் 11 ஆண்டுகள் கழித்து 2037 ஆம் ஆண்டிலேயே இத்தகைய “முழுமையான பெப்ரவரி” மாதத்தைக் காண முடியும்.

இந்த நாட்காட்டி ஒழுங்குமுறை பலருக்கும் திட்டமிடல்களைச் செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Exit mobile version