அரசியல்
வகுப்பறையில் ‘ரொக்கெட்’ விட்டு விளையாடிய ரணில் – அநுர
🔴 பண்டாரநாயக்க படுகொலை தினத்தன்று ரணில், அநுரவுக்கு நடந்தது என்ன?
🔴 கொழும்பு கெம்பஸில் ரணிலை சுற்றிவலம் வந்த மாணவிகள்
🔴 ரோஹன விஜேவீரவுக்காக சட்டத்தரணியாக ஆஜரான ரணில்
🔴 ரணிலும், சந்திரிக்காவும் போட்ட ‘டான்ஸ்’
( கொழும்பு ரோயல் கல்லூரியில் – தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க ஆகியோருடன் ஒரே வகுப்பில் கல்வி பயின்றவர்தான் சட்டத்தரணி தீப்தி லியகனே. ரணில் விக்கிரமசிங்க குடும்பத்தாருடன் நெருங்கி பழகியவர். 1954 இல் ரோயல் கல்லூரியில் கல்வியை ஆரம்பிப்பதற்கு முன்னரே, ரணிலுடன் நட்பு வைத்திருந்தவர்.
‘சிலுமின’ வார இதழுக்கு வழங்கிய நேர்காணலில்,
ரணில் விக்கிரமசிங்கவின் மாணவ மற்றும் இளமைப் பருவம் குறித்தும், அவரின் வாழ்வில் நடைபெற்ற சில சுவாரஷ்யமான சம்பவங்கள் தொடர்பான தகவல்களையும் பகிர்ந்துள்ளார் சட்டத்தரணி தீப்தி லியகனே.
அது தொடர்பான தொகுப்பை வஜீர லியகனே இன்றைய சிலுமின வார இதழில் எழுதியுள்ளார். அதில் முக்கியமான சில தகவல்களை தொகுத்து வழங்குகின்றேன்.
ரணிலும், அநுரவும் வகுப்பறைக்குள் ‘ரொக்கெட்’ விட்டு விளையாடுவார்கள். சிறார் பருவத்தில் விளையாட்டுக்கே முன்னுரிமை வழங்கினோம்.
வீட்டிலே ராஜ உணவு இருந்தாலும், வெளியே வந்து ‘மாங்காய் அச்சாறு’, ‘லொவி அச்சாறு’, ‘அம்ரெல்லா அச்சாறு’ என்பவற்றை விரும்பி , நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார் ரணில். தனியே சாப்பிடுவது கிடையாது.
ஜே.ஆரை, ரணில் அங்கிள் என்றே அழைப்பார். அவரும் ரணில்மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். குடும்பத்தில் தனது இடத்தை நிரப்பக்கூடியவர் ரணில்தான என அவர் திடமாக நம்பினார்.
வகுப்பில் இருந்த உயரமான மாணவன் ரணில்தான். அவரும், சந்திரிக்காவும் ஒன்றாக நடனம் பயின்றவர்கள்.
1959 இல் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட நாளன்று, அநுரவை அழைத்துச்செல்ல ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் வரவில்லை. ரணிலின் தாயாரே இருவரையும் அழைத்துச்சென்றார்.
அந்த காலத்தில் கெம்பஸில் இருந்த அழகான – மிடுக்கான பையன்தான் ரணில். அவரை விரும்புவதற்கு மாணவிகளுக்கிடையில் கடும் போட்டி. வசதி இருந்தாலும் செருப்பு அணிந்து, சாதாரணமாகவே அவர் கெம்பஸ் வருவார்.
ரணில் சட்டத்தரணியாக, ரோஹன விஜேவீரவுக்காக வாதாடியுள்ளார். (ரோஹன விஜேவீர, ஜே.வி.பியின் ஸதாபகத் தலைவர்)
பாடசாலையிலும் ரணில் சத்தமின்றியே சாதிப்பார். செய்து முடித்த பிறகே எமக்கு தெரியும். தினேஷ் போராட்ட குணம் கொண்டவர். எமது ‘செட்டில்’ இருந்த இருவர் ஜனாதிபதியும், பிரதமரும் ஆகியுள்ளனர். இது உலக சாதனை.
ஆர்.சனத்
You must be logged in to post a comment Login