26 வழக்குகளில் வெற்றி பெற்ற வக்கீல்! அம்பலமான உண்மை
வழக்கறிஞராக இல்லாவிட்டாலும், இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் வாதிட்டு சுமார் 26 வழக்குகளில் வெற்றி பெற்றார். இந்த சம்பவம் கென்யாவில் நடந்துள்ளது.
கென்யா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 26 வழக்குகளில் வெற்றி பெற்ற பிரையன் மவெண்டா என்ற போலி வழக்கறிஞர் பொலிசாரிடம் சிக்கியதும் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.
அறிக்கையின்படி, 26 வழக்குகளில் வெற்றி பெற்ற பிறகும், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரால் கூட, தன் முன் வாதிட்ட வழக்கறிஞர் போலி வழக்கறிஞர் என்பதை அடையாளம் காண முடியவில்லை.
நைஜீரிய ட்ரிப்யூன் அறிக்கையின்படி, அந்த இளைஞன் நீதிமன்றத்தில் வாதாடிய அனைத்து வழக்குகளும் மாஜிஸ்திரேட், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு முன்பாக இருந்தன. அவர்களில் ஒருவர் கூட அவர் கைது செய்யப்படும் வரை போலி வழக்கறிஞரை அடையாளம் காணவில்லை என்று கூறப்படுகிறது.
கென்யாவின் லா சொசைட்டியின் நைரோபி கிளையின் ரேபிட் ஆக்ஷன் டீம் பிரையனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளது. பொதுமக்களிடம் இருந்து பல புகார்கள் வந்ததையடுத்து போலி வழக்கறிஞர் பிரையன் லா பிடிபட்டார்.
விரிவான விசாரணைக்குப் பிறகு, பிரையன் லா சொசைட்டியில் உறுப்பினராக கூட இல்லை என்பதை புலனாய்வாளர்கள் உணர்ந்தனர். இதை வைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
அவர் நீலிவால் பொலிஸ் காவலில் உள்ளார். அவர் தனது பெயரைப் போலவே மற்றொரு வழக்கறிஞரின் பெயரில் கணக்கைப் பயன்படுத்தி, தனது சொந்த புகைப்படத்தைப் பதிவேற்றி மோசடி செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.