rtjy 196 scaled
உலகம்செய்திகள்

24 மணிநேர கெடு விதித்த இஸ்ரேல்

Share

24 மணிநேர கெடு விதித்த இஸ்ரேல்

பாலஸ்தீனத்தின் காசாவுக்குள் தரைவழியாக நுழைந்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருவதனால் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காசாவின் வடக்கு பகுதியில் வசிக்கும் 11 இலட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் காலக்கெடு விடுத்துள்ளது.

இதன் போது 1,200க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் தரை, வான் மற்றும் கடல் வழியாக இஸ்ரேலின் தென் பகுதியில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இத்தாக்குதலில் இதுவரை 1,300 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3,300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ஏராளமான இஸ்ரேலியர்களை, ஹமாஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 7ஆவது நாளாக நேற்று(14.10.2023) கடுமையான சண்டை இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்கவும், ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கவும் காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைய இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவத்தின் ஒரு லட்சம் வீரர்களும் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தயார் நிலையில் உள்ளதுடன் 300 பீரங்கிகள் காசா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாக தெரியவருகின்றது.

இதேவேளை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 23 இலட்சம் மக்கள் உள்ளதுடன் காசாவின் வடக்கு பகுதியில் மட்டும் சுமார் 11 இலட்சம் பேர் வசிக்கின்றனர்.

இஸ்ரேல் இராணுவம் வடக்கு பகுதியில் தரைவழியாக நுழைய திட்டமிட்டு உள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு வசிக்கும் மக்கள் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...

Untitled 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னாரில் பெரும் அதிரடி: 1,750 கடல் அட்டைகளுடன் 36 சந்தேக நபர்கள் கடற்படையால் கைது!

மன்னார் – இலுப்பைக்கடவை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி (Diving) நடவடிக்கையில்...

Untitled 55
செய்திகள்இந்தியா

பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார்: கேரளத் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி கடும் தாக்கு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொல்லத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ்...