tamilni 172 scaled
இலங்கைசெய்திகள்

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!

Share

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் போட்டியிடவுள்ளார்.

அந்நாட்டில் பொதுத் தேர்தல் நாளை சனிக்கிழமை (14.10.2023) நடைபெறவுள்ளது.

வேட்பாளரான செந்தூரன் அருளானந்தம் இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பாரிய கட்டுமான திட்டங்களில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.

அத்துடன், நியூசிலாந்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இவர், யாழ். பரியோவான் (St.John’s College) மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்று அந்நாட்டில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...