tamilni 157 scaled
உலகம்செய்திகள்

ஈரானை கடுமையான எச்சரித்த அமெரிக்கா

Share

ஈரானை கடுமையான எச்சரித்த அமெரிக்கா

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ. பைடன் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஹமாஸ் அமைப்பானது அங்குள்ள குழந்தைகளை கொள்வதான புகைப்படங்களை பார்த்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகள் கொலை தொடர்பான படத்தை பைடன் பார்க்கவில்லை. இஸ்ரேலில் இருந்து வரும் தகவல் அடிப்படையில் கூறினார்” என விளக்கமளித்ததுள்ளது.

இது தொடர்பில் பைடன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

‛‛அமெரிக்க விமானங்கள் இஸ்ரேலுக்கு சென்றுள்ளன. கூடுதல் போர் விமானங்கள் செல்ல உள்ளன.

ஈரானியர்களுக்கு தெளிவாக சொல்ல விரும்புவது என்னவென்றால் ஜாக்கிரதையாக இருங்கள்” என எச்சரித்த்துள்ளார்.

மேலும், ஹமாஸ் தாக்குதலில் 14 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதை ஜோ பைடன் உறுதி செய்துள்ளார்.

போர் விவகாரம் தொடர்பில், இஸ்ரேலிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

“கைக்குழந்தைகளும் படுகொலை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றது. இந்த கொடூரமான செயல்களில் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஈடுபடுவார்கள் என நினைக்கவில்லை.

ஆனால், இதனை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அதிகாரிகள் சிலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் செயலை, இறந்த குழந்தைகளின் உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். காசாவில் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கைகள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என கூறியுள்ளார்.

மேலும், இஸ்ரேல் தாக்குதல் குறித்து சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியும் தொலைபேசியில் ஆலோசனை நடத்தி உள்ளதாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது முகமது பின் சல்மான் கூறும்போது, ‛‛ தற்போதைய மோதலை தவிர்க்க சர்வதேச மற்றும் பிராந்திய நாடுகளுடன் சவூதி அரேபியா தொடர்பில் உள்ளது.

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என கூறியதாக குறித்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்த நிலையில் சீனா அன்மையில் மத்தியஸ்தம் செய்து வைத்தது.

இதனையடுத்து மார்ச் மாதம் உறவை புதுப்பித்துக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...