rtjy 111 scaled
இலங்கைசெய்திகள்

சர்வதேச விசாரணை இல்லையேல் ராஜபக்சக்களின் கதியே ரணிலுக்கும்

Share

சர்வதேச விசாரணை இல்லையேல் ராஜபக்சக்களின் கதியே ரணிலுக்கும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும். இல்லையேல் கடந்த ஆட்சியில் இருந்த ராஜபக்சக்களுக்கு என்ன நடந்ததோ அதே நிலைமைதான் அவருக்கும் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை மீதான ஐ.நா. உரிமைகள் சபையின் தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரிக்க முடியாது.

மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதை அவர் மறக்கவும் கூடாது. எனவே, ஐ.நா. தீர்மானங்களின் பரிந்துரைகளை அவர் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.

இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் குறித்தும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு (ரி.சரவணராஜா) இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த நாட்டில் சர்வதேச விசாரணைகள் நடந்தால்தான் உண்மைகள் வெளிவரும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்கும்.

சர்வதேச விசாரணையே இந்த நாட்டில் இன, மத நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். இல்லையேல் அனைவரும் சந்தேகங்களுடன் வாழ வேண்டிய நிலையே ஏற்படும்.

சர்வதேச விசாரணைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடமளிக்காவிடின் கடந்த ஆட்சியில் இருந்த ராஜபக்சகளுக்கு என்ன நடந்ததோ அதே நிலைமை தான் அவருக்கும் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...