உலகம்
இந்திய மாணவர்களுக்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் அளிக்கும் உறுதி
இந்திய மாணவர்களுக்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் அளிக்கும் உறுதி
கனடாவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிப்பதாக கூறி பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தற்போது முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், அசுர வளர்ச்சி கண்டுள்ள வணிகத்தில் வீழ்ச்சியைக் குறைக்க தற்போது பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் முயற்சி முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கனேடிய கல்லூரிகள் மற்றொரு செமஸ்டரைத் தொடங்கத் தயாராகும் நிலையில், சில இந்திய மாணவர்கள் தங்கள் படிப்புகளைத் தாமதப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, கனடாவில் உயர்கல்வி என்பது தற்போதைய நெருக்கடிக்கு இணையான சேதமாகலாம் எனவும் அஞ்சுவதாக கூறப்படுகிறது. கனடாவில் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் சுமார் 40 சதவீதம் பேர்கள் இந்தியர்கள் என்ற நிலை உள்ளது.
கனடா பொருளாதாரத்தில் ஆண்டுக்கு 14.6 பில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு சர்வதேச மாணவர்களின் பங்களிப்பு உள்ளது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒருபக்கம், சுமார் 100,000 இந்திய மாணவர்கள் ஆங்கில மொழி திறன் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
அத்துடன் அடுத்த ஆண்டு கனடாவில் படிக்க போதுமான நிதி உதவிக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். கனடாவை பொறுத்தமட்டில் தற்போது முன்னணி பல்கலைக்கழகங்கள் ஆண்டுக்கு 40,000 கனேடிய டொலருக்கு படிப்பை வழங்க முன்வந்துள்ளது.
மட்டுமின்றி பல கல்லூரிகள் தற்போதைய நெருக்கடியால் மாணவர்கள் கைவிட்டு போகாமல் இருக்க கடும் முயற்சிகளில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். கனடாவில் டசின் கணக்கான பல்கலைக்கழகங்கள் தற்போது மாணவர்களை தொடர்புகொள்ளத் தொடங்கியுள்ளது.
பெரும்பாலான இந்திய மாணவர்கள் தற்போது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கோருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், 30 மில்லியன் மக்கள் தொகையில் ஏறக்குறைய ஒவ்வொரு நான்கு குடும்பத்திலும் ஒரு உறுப்பினர் கனடாவில் படிக்கிறார் அல்லது படிக்கத் தயாராகிறார் என்றே கூறப்படுகிறது.
பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரத்தில் இருந்து மட்டும் கடந்த ஓராண்டில் 5,000 மாணவர்கள் கனடாவுக்கு கல்வி பயில சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.