இலங்கை
மக்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ள நுவரெலியா
மக்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ள நுவரெலியா
இலங்கையில் நீண்ட விடுமுறையை மக்கள் மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் இன்று வரையான காலப்பகுதியில் நீண்ட விடுமுறையாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக பெருமளவு மக்கள் நுவரெலியாவுக்கு படையெடுத்துள்ளனர்.
இந்நிலையில் நுவரெலியா செல்லும் பாதையில் காணப்படும் ஒன்பது வளைவுகள் பாலத்தில் பெருமளவு மக்கள் திரண்டுள்ளனர்.
விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.