rtjy 281 scaled
இலங்கைசெய்திகள்

யாழில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

Share

யாழில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம் ஏற்படுத்த முயற்சி

யாழில் இன்று இடம்பெற்று வரும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை குழப்பம் ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் செயற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாளான இன்று (26.09.2023) யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.

கொட்டும் மழைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் நினைவிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தினர்.

நினைவிடத்தை அண்மித்த வீதியில் பெருமளவான மக்கள் காணப்பட்டமையால் , குறித்த வீதி ஊடாக வந்த வாகனங்களை மற்றைய மாற்று வீதியூடாக செல்ல அங்கிருந்த சிலர் வழி வகுத்தனர்.

அவ்வேளை அங்கு வந்த பொலிஸார் போக்குவரத்தை மக்கள் குவிந்துள்ள வீதி ஊடாகவே மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளுக்கு பணித்ததுடன், அங்கிருந்து போக்குவரத்து ஒழுங்குகளை செய்த இளைஞர்களையும் அவ்விடத்தில் இருந்து அச்சுறுத்தி அகற்றியுள்ளனர்.

எனினும் பெரும்பாலான சாரதிகள் தாங்களாகவே அஞ்சலி நிகழ்வு இடம்பெறும் வீதியை தவிர்த்து மாற்று வீதி வழியாக தமது பயணத்தை மேற்கொண்டனர்.

அதேவேளை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தடை செய்ய கோரி யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (18.09.2023) யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மறுநாள் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனை அடுத்து புதன்கிழமை விசேட ஹெலியில் யாழ்ப்பாணம் வந்த சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த அரச சட்டவாதிகள் உள்ளிட்ட விசேட குழு நினைவேந்தலை தடை செய்ய கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தது. அதனையும் மறுநாள் யாழ்.நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்தது.

அதன் போது , குற்றச்செயல்கள் வன்முறைகள் இடம்பெற்றால் அவற்றை கட்டுப்படுத்தவும், அவ்வாறான செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தவும் பொலிஸாரினால் முடியும்.

அவ்வாறு இருக்கையில் நடக்க போகும் நிகழ்வில் அப்படியான சம்பவம் நடைபெறும் என கூறி தடை கோருவதனை ஏற்க முடியாது என மன்று கூறி இருந்த நிலையில், உணர்வு பூர்வமான நிகழ்வில் இளைஞர்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை வன்முறையில் ஈடுபட வைக்கும் முயற்சியில், இன்றையதினம் பொலிஸார் நினைவேந்தலை குழப்பும் விதமான செயற்பாட்டில் ஈடுபட்டு இருந்தனர் என அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
11 1
செய்திகள்உலகம்

மார்ச் 3-இல் தோன்றும் ‘இரத்த நிலவு’: 58 நிமிடங்கள் நீடிக்கும் 2026-இன் முதல் சந்திர கிரகணம்!

2026 ஆம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம் எதிர்வரும் மார்ச் 3-ஆம் திகதி நிகழவுள்ளதாக சர்வதேச...

goldsteal cleanup
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலவாக்கலையில் நூதனத் திருட்டு – சிசிடிவி காட்சி வெளியீடு!

தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர்...

10 1
செய்திகள்உலகம்

கால்பந்து மைதானம் அளவுள்ள பிரம்மாண்ட பவளம்! கிரேட் பேரியர் ரீஃபில் தாய்-மகள் குழுவின் வரலாற்றுச் சாதனை.

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில், இதுவரை ஆவணப்படுத்தப்பட்டவற்றிலேயே உலகின் மிகப்பெரிய பவளக் காலனியை...

09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...