இலங்கை
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக அறிவிப்பு
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக தற்போது கிடைக்கும் 9 சதவீத நலன், அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு சொந்தமான பணத்துக்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பதுடன், நிதியத்திற்கு சொந்தமான பணத்தை முதலீடு செய்த பின் கிடைக்கும் இலாபத்துக்கு நூற்றுக்கு 14 சதவீதம் மாத்திரமே வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து காண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.