rtjy 140 scaled
இலங்கைசெய்திகள்

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல்

Share

விசேட வைத்தியர்களின் சேவைக்காலம் தொடர்பில் தகவல்

அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை வைத்தியர்களின் சேவைக்காலத்தை 65 வயது வரை நீடிப்பதற்கான அனுமதி வழங்குதல் குறித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை குறைக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை ஊழியர்களின் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு வயது 60 ஆகும். இருப்பினும் புதிய பிரேரணையின்படி நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 65 ஆண்டுகள் வரை மருத்துவர்கள் சேவையில் இருக்க புதிய ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் சுகாதார சேவை வீழ்ச்சியடைவதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் சுட்டிகாட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...