tamilni 95 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை

Share

இலங்கைக்கு அழுத்தம்!! ஐ.நா கோரிக்கை

பொறுப்புக்கூறல் தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல் மிகவும் இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளது.

போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் வேதனையுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

போர் குற்றச்செயல்கள் அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பிலான பொறுப்புகூறல் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முன்னோக்கி நகர வேண்டுமாயின் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும்,பொறுப்புகூறல் விவகாரத்தில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிதல் மட்டும் போதுமானதல்ல எனவும் பொறுப்புகூறல் மற்றும் மாற்றங்களை நடைமுறைபடுத்தக்கூடிய அரசியல் விருப்பம் என்பனவும் மிகவும் அத்தியாவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் சர்வதேச உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையின் பொருளாதார பிரச்சினைக்கு சர்வதேச சமூகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதேவேளை, குற்றசெயல்களுக்கு பொறுப்புக்கூறல் வெளிப்படைத்தன்மை, நல்லாட்சி ஆகிய விடயங்களில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதனை இலங்கைக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து நிறுவன ரீதியான மாற்றங்களை, மறுசீரமைப்புகளை செய்து குற்றச்செயல்களுக்கு பொறுப்புகூறல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் மனித உரிமைகளை உறுதி செய்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....

dead body 3
இலங்கை

வயோதிப பெண் மரணம் – தொடரும் தீவிர விசாரணைகள்.

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் பகுதியில் உள்ள வீடொன்றில் வயதான தம்பதியினர் இருவரும் தனியாக...

Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...