rtjy 288 scaled
இந்தியாசெய்திகள்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல நடிகை வரலக்ஷ்மி

Share

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல நடிகை வரலக்ஷ்மி

நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

குறித்த குற்றச்செயல் தொடர்பில் இலங்கையை சேர்ந்த 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கமும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை ஆதிலிங்கம் திரைதுறையில் முதலீடு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் ஆதிலிங்கம் குறித்து விசாரிக்க நடிகை வரலட்சுமி விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

‘சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க நினைக்கிறேன். ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் எனக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை” என தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த வழக்கில் இது வரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...