இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்
இலங்கைசெய்திகள்

இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்

Share

இனவாதம் கக்கும் எம்.பிக்களை உடனே சிறையில் அடையுங்கள்

நாட்டில் தொடர்ந்தும் இனவாதம் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் மீண்டும் இரத்தக் களரியை ஏற்படுத்தும் விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் தொடர்ந்தும் இனவாத, மதவாதக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்களின் இவ்வாறான கருத்துக்களால் நாடு அவமானத்தைச் சந்திக்கின்றது.

இந்த விடயத்தில் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் நழுவல் போக்கில் செயற்படக்கூடாது.

வெறும் கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் தெரிவிக்காமல் ரணில் அரசு செயலில் இறங்க வேண்டும்.

தொடர்ந்தும் இனவாதம் பேசி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளை அரசு உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...