கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ
உலகம்செய்திகள்

கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ

Share

கீழே விழுந்த தேசிய கொடி! அடிக்க கை ஓங்கிய திமுக எம்.எல்.ஏ

கொடியேற்றும் போது, தேசியக்கொடி கீழே அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை அடிக்க கை ஓங்கிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

75 -வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடி வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையிலும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலும் தேசியக்கொடி ஏற்றினர்.

மேலும், தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தலைமையில் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் கலந்து கொண்டார்.

அங்கு, கும்பகோணம் 8-வது பட்டாலியன் என்சிசி கமாண்டிங் ஆபிசர் கர்னல் எஸ்.சந்திரசேகரன் மற்றும் திமுக எம்.எல்.ஏ இருவரும் இணைந்து கொடி ஏற்ற முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தேசியக்கொடி அறுந்து விழுந்தது.

இதனைத்தொடர்ந்து, தேசியக்கொடி அறுந்து விழுந்ததால் அருகில் உள்ளவரை பார்த்து திமுக எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் கை ஓங்கினார்.

இதனால் அருகில் இருந்தவர்கள் தேசியக்கொடியை மீண்டும் கயிற்றில் கட்டி ஏற்றினர். தற்போது திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 10
செய்திகள்இலங்கை

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம்: சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

இலங்கையில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் உயிரிழந்தவர்களின்...

06 10
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் – இலங்கை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு: பயணச் சிக்கல்களால் நேர்ந்த மாற்றம்!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர், தவிர்க்க முடியாத...

05 11
செய்திகள்இலங்கை

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு: 12.5 கிலோ சிலிண்டர் புதிய விலை ரூ. 3,990 ஆக அதிகரிப்பு!

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, மார்ச் 10, 2026 நள்ளிரவு...

02 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீதுவையில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: 7 பேர் கைது

சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நீண்டகாலமாக இயங்கி...