உலகின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்
சினிமாசெய்திகள்

உலகின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்

Share

உலகின் நீளமான ரயில்வே சுரங்கப்பாதையில் தடம் புரண்ட ரயில்

சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள உலகின் நீண்ட ரயில்வே சுரங்கப் பாதையில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்திலுள்ள Gotthard Base Tunnel, உலகிலேயே நீளமான ரயில்வே சுரங்கப்பாதையாகும். அது, ஆல்ப்ஸ் மலையின் ஊடாக அமைக்கபட்டுள்ளது.

அந்த சுரங்கப்பாதையின் நீளம் 57 கிலோமீற்றர் ஆகும்.

ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
அந்த ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மீண்டும் அந்த பாதையில் போக்குவரத்து துவங்க, 16ஆம் திகதி வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பாதையில் ரயில் தடம் புரண்டதால், மாற்றுப்பாதை ஒன்றில் சில பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன என்றாலும், பயணிகள் கூடுதலாக ஒரு மணி நேரம் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சரக்கு ரயிலின் தடம் புரண்ட சில பெட்டிகளில் அபாயகரமான ரசாயனங்களும் உள்ளன என்றாலும், எந்தப் பெட்டியிலும் கசிவு எதுவும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...

20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...