வவுனியா இரட்டை கொலை - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைசெய்திகள்

வவுனியா இரட்டை கொலை – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

வவுனியா இரட்டை கொலை – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்கியதில் தம்பதிகள் மரணமான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 24 திகதி வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் அகமட் ரசீம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்றைய தினம் (11.08.2023) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இன்று (11.08.2023) வவுனியா வைத்தியசாலையில் ஆள் அடையாள அணிவகுப்பு திகதியிடப்பட்டிருந்த போதும், சாட்சியின் உடல்நிலை சீர் இல்லாத காரணத்தால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதனால் சாட்சி நீதிமன்றத்துக்கு சமூகமளிக்கவில்லை. இந்நிலையில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 6 பேரையும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கவும், மீண்டும் 24ஆம் திகதி ஆள் அடையாள அணி வகுப்பிற்காகச் சாட்சிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முதலாம் சந்தேகநபர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்திய அதிகாரியின் மேற்பார்வையின் கீழ், சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதனால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் முன்னிலையாகி, சந்தேகநபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் உள்ளாக்காமல் அவர்களின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சந்தேகநபர்கள் விசாரணைகளுக்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் எனவும் மன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...