உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!
உலகம்செய்திகள்

உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!

Share

உக்ரைனுக்குள் மீண்டும் நுழையும் ரஷ்யா!

உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்திற்கு உட்பட்ட 5 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை கார்கிவ் இராணுவ நிர்வாகத்தின் மாஸ்கோ தலைமையான விட்டலி கஞ்சேவ் ரஷ்ய தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகள் கார்கில் பிராந்தியத்தில் 29 குடியேற்றங்களை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன் உக்ரைனிய படைகள் கிளஸ்டர் குண்டுகளை இப்பகுதியில் தாக்குதலுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதலால் தங்களுடைய வீரர்களால் 17 குடியேற்றங்களில் இருந்து மட்டுமே செயல்பட முடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைன் ஆயுதப்படை இன்று கார்கிவ்-வின் 10 நகரங்கள் கடுமையான ஏவுகணை அல்லது வான் தாக்குதலுக்கு உள்ளானதாக ஒப்புக்கொண்டுள்ளது.

இருப்பினும், ரஷ்யா அறிவித்துள்ள 5 நகரங்களின் கைப்பற்றல் குறித்து எத்தகைய அங்கீகாரமும் உக்ரைன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...