Medam
பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தாமதமான விடயங்கள் தடையின்றி நடைபெறும். பிடிவாதப்போக்கை கைவிடுதல் நன்று. பொறுமையைக் கடைப்பிடியுங்கள. குடும்பத்தில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்டு அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் பணியில் பிறரின் தலையீட்டை குறைத்துக்கொள்ளுங்கள். கனிவாக அனைவரையும் அணுகுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். இழுபறி காரியம் நிறைவேறும்.
Edapam
தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். நிதி விடயங்களில் திருப்தி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிருங்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி வரும் செய்திகள் கிடைக்கும். எதிர்பாரா லாபம் விற்பனையில் உண்டாகும். காரியங்கள் ஆதாயம் தரும். வீண் அலைச்சலால் அசதி உண்டாகும். கடன்கள் விடயத்தில் அக்கறை செலுத்துதல் அவசியம். உறவினர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
Mithunam
மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பிள்ளைகளால் செலவு உண்டாக வாய்ப்புண்டு. பணத் தேவை சற்று அதிகமாகக் காணப்படும். தடைப்பட்ட செயல் தானாக நடைபெறும் நாள். புதிய நட்பு வட்டாரம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். தெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.
Kadakam
சுபநிகழ்ச்சி காரணமாக மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அவசரமின்றி அமைதியாக செயற்படவும். பணியிடத்தில் நன்மதிப்பு உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். முயற்சிகள் தாமதமானாலும் சாதகமாக அமையும்.
Simmam
பல வகையிலும் அனுகூலமாக அமையும் நாள். அலுவலகத்தில் மறைமுக தொல்லைகள் நீங்கி மறையும். பேச்சிலும் செயலிலும் திறமை வெளிப்படும். மனநிறைவு உண்டாகும். சில சங்கடங்களை சமாளிக்க வேண்டிய சூழல் உண்டாகும். வீண் மனவருத்தம் உண்டாகும். பணியாளர்கள் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். சூரிய வழிபாடு நன்மை உண்டாக்கும்.
Kanni
மனதில் உற்சாகம் பிறக்கும். பிறரிடம் பக்குவமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பணியாளர்களுக்கு செலவு உண்டாகும். திடீர் செலவுகளால் கையிருப்பில் உள்ள பணம் கரையும். பெரியவர்களிடம் பேசும்போது பணிவு அவசியம். கனவுகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். பேச்சினால் நன்மை உண்டாகும். எதையும் சமாளிக்கும் திறன் காணப்படும்.
Thulaam
பணியில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பாரா சுபநிகழ்வு உண்டாகும். சந்தோசம் மூலம் பரபரப்பாக செயலாற்ற வேண்டிய தேவை உண்டாகும். செயலில் கவனம் அவசியம். முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் சாதகமாக அமையும். பிறரின் ஆதரவு முன்பை விட அதிகமாகக் காணப்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுகூல செய்தி கிடைக்கும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிருங்கள்.
Viruchchikam
பெண்களுக்கு மனதில் திருப்தி உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். தொழில் ரீதியான தடை விலகும். மகிழ்ச்சியான நாள். கோபத்தில் பிரிந்தோர் ஒன்றுகூடுவார்கள். வெளியிடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பர். திடீர் செலவுகள் ஏற்பட வாண்ப்புண்டு. செலவுகள் அதிகரிப்பால் மனஉளைச்சல் ஏற்படும்.
Thanushu
சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின் சீராகும். பொறுமையைக் கடைப்பிடிப்பது சிறந்தது. உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். கடன் விடயத்தில் கவனம் செலுத்துவீர்கள். பெண்கள் துணிச்சலுடன் செயற்பட வேண்டிய நாள். எதிர்பாராத சேமிப்பு உண்டாகும். உற்சாகமாக செயற்படுவீர்கள். நண்பர்களால் பணவரவு உண்டா கும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். லாபம் கூடுதலாக உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
Maharam
புதிய முயற்சிகளை தவிர்த்துக் கொள்ளுதல் நன்று. வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது வீண்விவாதங்களில் ஈடுபடாதீர்கள். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தானம் விலகும். எதிர்பாரா பணவரவு உண்டாகும். பொறுப்புக்களில் கவனமாக செயற்படுவீர்கள். பணியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு உண்டாகாது. பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள். வரவை விட செலவு அதிகமாக காணப்படும்.
Kumbam
ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். முன்பின் தெரியாதவர்களிடம் கவனமாகப் பழகவும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தேவையின்றி பிற விடயங்களில் தலையிடாதீர்கள். மனதுக்கு நெருக்கமானவர்களுடன் உறவு ஏற்படும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். சக பணியாளர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தாய் வழி உறவால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.
Meenam
சிக்கனமாக இருப்பது நல்லது. நெருங்கியவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். வாழ்க்கைத்துணையின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை அளிக்கும். சில சில சங்கடங்கள் தோன்றி மறையும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி ஏற்படும். அனுசரித்து நடத்தல் அவசியம். சொந்தபந்தங்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
Leave a comment