உலகம்
பிக் பாஸ் 7ல் வரப்போகும் பெரிய மாற்றம்!
![பிக் பாஸ் 7ல் வரப்போகும் பெரிய மாற்றம்! 1 பிக் பாஸ் 7ல் வரப்போகும் பெரிய மாற்றம்!](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2021/09/kamals-bigg-boss-5-777.jpg?lossy=2&strip=1&webp=1)
பிக் பாஸ் 7ல் வரப்போகும் பெரிய மாற்றம்!
விஜய் டிவியில் பிக் பாஸ் இதுவரை 6 சீசன்கள் ஓடி முடிந்திருக்கிறது. தற்போது 7ம் சீசனை தொடங்க முதற்கட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
செட் வேலை ஒரு பக்கம் நடக்க, போட்டியாளர்களை தேர்வு செய்யும் இன்னொரு பக்கம் நடந்து வருகிறது. பல முக்கிய பிரபலங்களை ஷோவுக்கு கொண்டு வர குழுவினர் முயற்சியில் இருக்கின்றனர்.
மேலும் ப்ரோமோ வீடியோவும் இந்த மாத இறுதியில் வர இருக்கிறது.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 7ம் சீசனில் ஒரு முக்கிய மாற்றம் வர இருக்கிறதாம். இரண்டு வீடுகள் இந்த சீசன் இருக்க போகிறதாம்.
போட்டியாளர்களை இரண்டாக பிரித்து அவர்களை தனித்தனி வீடுகளில் முதலில் வைத்திருப்பார்களாம். அதன் பின் ஒருகட்டத்தில் இரண்டு வீடுகளையும் ஒன்றிணைப்பார்கள் என கூறப்படுகிறது.
இந்த மாற்றம் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்று என்பதால் அனைவரும் தற்போது ஆச்சர்யத்தில் இருக்கின்றனர்.
You must be logged in to post a comment Login