அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா காடுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாது தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 5 ஏக்கர் அளவிலான காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ தற்போது சில மணிநேரத்தில் 400 ஏக்கர் அளவுக்கு பரவலடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காட்டுத் தீ ஏற்பட்டதையடுத்து அதனை அண்டியுள்ள சாலை மூடப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபடும் வீரர்களும் காயங்களுக்கு உள்ளாகின்றனர்.
அத்துடன் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் வீரர்கள் திணறி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment