முன்னாள் இராணுவச் சிப்பாய் கழுத்தறுத்துப் படுகொலை! விசாரணை தீவிரம்
உலகம்செய்திகள்

தாயின் வெறிச்செயல்!! குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை!

Share

தாயின் வெறிச்செயல்!! குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தனது 4 வயது மகளை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தெலங்கானா ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கல்யாணி(22). இவர் டிரைவர் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. பின்பு 2019 ஆம் ஆண்டு தன்விதா என்ற பெண்குழந்தை பிறந்தது. தற்போது, அந்த குழந்தைக்கு 4 வயது ஆகிறது.

இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் இவர்கள் 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இதனையடுத்து கல்யாணி, பெற்றோர் ஊரான செங்கன் மாவட்டத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு சென்றிந்தார். அங்கு அவருக்கு நவீன் குமார் என்ற 19 வயது இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கல்யாணி, பெற்றோர் இல்லாத சமயத்தில் நவீன் குமாரை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாய் இருந்துள்ளார்.

அப்போது, அவர்களுடைய கள்ளக்காதலுக்கு தன்விதா இடையூறாக இருந்துள்ளார், பின்பு குழந்தையை கொல்ல வேண்டும் என்று முடிவு செய்து நேற்று முன்தினம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, உடல்நிலை சரியில்லாமல் குழந்தை இறந்து போனதாக கல்யாணி கூறியுள்ளார்.

குழந்தையின் இறப்பில் சந்தேகமடைந்த ரமேஷ் பொலிசில் புகார் அளித்தார். பின்பு, கல்யாணியை விசாரணை செய்த போது குழந்தையை கொன்றதாக தெரியவந்தது.

இதனையடுத்து, கல்யாணியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிட்டபெத்தர பகுதியில் இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு...

08 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனித புதைகுழி: ஏப்ரல் 20-ல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் செம்மணி மனித புதைகுழி வழக்கு, நேற்று (12) யாழ்ப்பாண நீதவான்...

07 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்புச் சம்பவம்: விசாரணைகளை கொழும்பு மாற்ற ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவு!

கடந்த பெப்ரவரி மாதம் 10-ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17...

06 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய எரிபொருள் கொள்வனவு: இலங்கை மற்றும் ரஷ்யா இடையிலான உயர்மட்ட கலந்துரையாடல்!

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சமாளிக்கும் நோக்கில்,...