பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

Share

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சு அறிவிப்பு

2024 பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

2023 கல்வியாண்டின் 2ம் தவணை ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி முடிவடையவுள்ளது. 2023ம் ஆண்டின் 3ம் தவணை 16ம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சர்ம சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை தற்சமயம் இடம்பெறுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலினால் பாடசாலைகள் மூடப்பட்டதையடுத்து ஏற்பட்ட தாமதங்கனை சீர்செய்யும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை என்பனவற்றை உரிய காலப்பகுதியில் நடத்தி முடிப்பது இந்தத் தவணை மாற்றத்தின் பிரதான நோக்கமாகும்.

இதேவேளை பாடசாலை அதிபர்களுக்கு நிதி அலுவலக நிர்வாக நடவடிக்கைகளை இலகுவான முறையில் மேற்கொள்வதற்கான அபிவிருத்தி அதிகாரிகளுடன் கூடிய புதிய சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிறேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு மின்சாரம், நீர்விநியோக கட்டணப் பட்டியல்களில் சலுகையை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Pastor Jerome
இலங்கை

அநுரவை புகழ்ந்த சர்ச்சையில் சிக்கிய போதகர்.

மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்த, ஜெரோம் பெர்னாண்டோ...

man death body
இலங்கை

பூட்டிய வீட்டிற்குள் ஆண் ஒருவரின் சடலம் – யாழில் சம்பவம்.

  யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியதாக...

police shooting
இலங்கை

காவல்துறையினர்மீது தாக்குதல் முயற்சி – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி,

பிலியந்தலை, வீரசிங்க மாவத்தை பகுதியில் இன்று காலை சந்தேகத்திற்கிடமான இருவரை சோதனையிட முற்பட்ட போது பொலிஸாரால்...

TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...