அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்
ஏனையவை

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்

Share

அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் வெடித்த மோதல்!! சுட்டுத்தள்ளப்பட்ட துப்பாக்கி குண்டுகள்

அமெரிக்காவின் சியாட்டில் உள்ள வணிக வளாகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 5 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் சியாட்டிலின் ரெய்னியர் கடற்கரை பகுதிக்கு அருகில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இளைஞர்களுக்கு மத்தியில் பயங்கர துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.

இதில் டஜன் டஜனான துப்பாக்கி குண்டுகள் சுட்டு தள்ளப்பட்டு இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவுகள், ஆடைகள் மற்றும் பொம்மைகள் வழங்கும் சமூக நலன் கூட்டத்தில் கலந்து கொண்ட 20 வயதுடைய இளைஞர்கள் இடையே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் துப்பாக்கி சூடு நடைபெற்ற 9200 பிளாக் ரெய்னியர் அவென்யூ-க்கு வந்த பொலிஸார், சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

இதில் ஒருவர் பலத்த காயங்களுடன் ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் இரண்டு ஆண்களும் மற்றும் இரண்டு பெண்களும் உயிருக்கு ஆபத்து இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்த சம்பவம் குறிவைத்த நபர்கள் மீது நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக அவர்கள் பாதிக்கப்பட்டார்களா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இளைஞர் குழுக்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த மோதலுக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாக தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 02 டிசம்பர் 2025 : சுப பலன்கள் கிடைக்கும் ராசிகள்

இன்று டிசம்பர் 2, 2025 கார்த்திகை மாதம் 16ம் தேதி செவ்வாய் கிழமை, மேஷ ராசியில்...

Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...