பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தரவும்
இலங்கைசெய்திகள்

பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தரவும்

Share

பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தரவும்

பொலிஸார் தவறு செய்தால் உடனடியாக அறியத்தருமாறு வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா – மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.பி. விக்ரமசிங்கவுக்கும் ஊடகவியலாளர்களுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (20.07.2023) அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் அத்தியட்கர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவித்துள்ளதாவது, வவுனியா மாவட்டத்தில் பல பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுக்கின்றனர்.

அதேவேளை திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவிடுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக தமக்கு தெரியப்படுத்தவும்.

பொதுமக்கள் தன்னை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் என்றும் 071-8591340 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களை நேரடியாக தமக்கு அறிவிக்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...