கொடிய நோயால் அவதிப்படும் நடிகை நந்திதா
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘அட்டகத்தி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, ‘இதற்குத்தானோ ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தில் ‘குமுதா’ என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து அசத்தியிருந்தார்.
அத்தோடு விஜய்யின் ‘புலி’ படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் வந்து போனார். என்ன தான் திறமை இருந்தாலும் துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவிற்கு பட வாய்ப்புகள் பெரிதளவில் கிடைக்காமல் போனது. அதனால் ரூட்டை மாற்றிய நந்திதா கவர்ச்சியில் தெறிக்க விட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது நந்திதா நடித்த ‘ஹிடிம்பா’ என்ற தெலுங்கு திரைப்படம் வருகிற ஜூலை 20-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அப்படத்தின் புரமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நந்திதா அதில் தனக்கு இருக்கும் அரிய வகை நோய் பாதிப்பு குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார்.
அதாவது அவர் ஃபைப்ரோமியால்ஜியா என்கிற தசைக் கோளாறு நோயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த நோய் பாதிப்பால் உடல் எடையில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்றும், ஒரு சின்ன வேலை செய்தால் கூட தசைகளில் பிரச்சனை ஏற்பட்டுவிடும் அளவுக்கு இந்த நோய் மிகவும் தீவிரமானது” எனக் கூறியுள்ளார்.
அத்தோடு “இந்த நோயின் காரணமாக தான் கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது எனவும், சில சமயங்களில் உடல் அசைவுகளுக்கே கஷ்டப்படும் அளவுக்கு இதன் பாதிப்பு இருக்கும் எனவும் இதனால விரைவில் சோர்வடைவதோடு, நினைவாற்றல் குறைபாடுகளும் ஏற்படுத்தும்” எனவும் கூறியுள்ளார்.
இவ்வாறாக நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்படுவதை போல் நடிகை நந்திதாவும் ஃபைப்ரோமியால்ஜியா என்கிற நோயால் அவதிப்படுவது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- best debut directors in tamil cinema
- cinema ticket channel in tamil
- intresting facts about tamil cinema
- intresting facts about tamil cinema directors
- latest tamil movies
- mr tamilan
- nandhitha
- samar tamil movie
- Tamil
- Tamil Actress
- tamil cinema
- tamil cinema (film genre)
- tamil cinema news
- tamil movie
- tamil movies
- tamil review
- tamil shorts
- tamil song
- tamil talkies
- tamil trending
- unknown facts about tamil cinema
- unknown facts about tamil cinema directors
Leave a comment