காதலிக்கு பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்க காதலன் செய்த செயல்!!
இலங்கைசெய்திகள்

காதலிக்கு பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்க காதலன் செய்த செயல்!!

Share

காதலிக்கு பிறந்த நாளில் இன்ப அதிர்ச்சி கொடுக்க காதலன் செய்த செயல்!!

அவிசாவளை, ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் சுமார் 68 லட்சம் ரூபாய் பெறுமதியான கார் மற்றும் சுமார் 11000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 8ஆம் திகதி சம்பவம் தொடர்பில் புத்தல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய 9ஆம் திகதி பல்வத்த பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஓட்டுநர் சோதனைக்காக காரின் உரிமையாளருடன் சென்றுள்ளார். அங்கு, காரில் ஏதோ சத்தம் கேட்டதாகவும், காரில் இருந்து இறங்கி, சத்தம் கேட்ட இடத்தை சோதனை செய்யுமாறு உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

உரிமையாளர் சோதனையிட்ட போது சந்தேக நபர் காரை ஓட்டிக் கொண்டு தப்பி சென்றுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை சப்ரைஸ் செய்வதற்காக காரை திருடியதாக குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 30 வயதுடைய கடுவெல, பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

ஹங்வெல்ல மற்றும் புத்தல பொலிஸ் நிலையங்கள் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...