முல்லைத்தீவில் மேலும் பல மனித எச்சங்கள்! அச்சத்தில் மக்கள்
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் மேலும் பல மனித எச்சங்கள்! அச்சத்தில் மக்கள்

Share

முல்லைத்தீவில் மேலும் பல மனித எச்சங்கள்! அச்சத்தில் மக்கள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் (06-07-2023) இடம்பெற்றன.

முல்லைத்தீவில் காணப்பட்ட மேலும் பல மனித எச்சங்கள்! அச்சத்தில் மக்கள் | More Human Remains Identified In Mullaitivu

குறித்த அகழ்வு பணிகளின் போது மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்று ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, பிளாஸ்ரிக் பொருள், வையர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வு பணிக்காக தற்காலிக அணைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிலளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
691d4cefe4b04fae5692dd8e
செய்திகள்உலகம்

ஜப்பானில் துறைமுகத்தில் பயங்கரத் தீ விபத்து: 170 கட்டிடங்கள் நாசம், ஒருவர் பலி!

ஜப்பானின் தென்மேற்கு ஒய்டா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான சகனோஸ்கி (Saganoseki) நகரத்தின் துறைமுகப் பகுதியில்...

image 1fa61088e1
செய்திகள்இலங்கை

திரிபோஷாவுக்குத் தீவிரப் பற்றாக்குறை: மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் நெருக்கடியில்!

நாட்டிலுள்ள பல மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகளில் திரிபோஷாவுக்குக் (Thriposha) கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக மருத்துவ...

images 1 10
செய்திகள்இலங்கை

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் 30 கிலோ ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது – பெறுமதி ₹150 மில்லியன்!

பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 30 கிலோ கிராம்...