ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு
இலங்கைசெய்திகள்

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

Share

ரணில் கோட்டாபய மீது குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் கடந்த வருடத்தை விட அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தகவல் முன்வைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான அலுவலகத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 3,044 மில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 5,457 மில்லியன் ரூபா திறைசேரியிலிருந்து பெறப்பட்டதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டதன் பின்னர், அதற்கான அடிப்படை மதிப்பீடுகள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், சில ஒதுக்கீடுகள் 25% இலிருந்து 760% வரை பாரிய தொகையால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய வருடாந்த மதிப்பீடுகளை தயாரிப்பதில் உரிய கணக்கியல் உத்தியோகத்தர்கள் உரிய கவனம் செலுத்தவில்லை எனவும் பெருமளவான செலவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதற்கான சான்றுகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
women arrest 796x445 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புறக்கோட்டையில் பரபரப்பு: பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்த பெண் கைது!

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெண் பொலிஸ் பரிசோதகர் என ஆள்மாறாட்டம் செய்து உலாவந்த பெண் ஒருவர்,...

AEQ6KC5NNRKZPBQY5NCRBKJPJY
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் அமெரிக்காவின் அதிரடி: வெனிசுவேலாவின் 6-வது எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு!

வெனிசுவேலாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக, கரீபியன் கடலில்...

image 870x 690020e21361a
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் அதிர வைக்கும் புள்ளிவிபரங்கள்: 2025-இல் மட்டும் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது!

யாழ். மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதற்கு...

26 69698bd01b247
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்கத்தில் கஞ்சா கடத்தல் முறியடிப்பு: மோட்டார் சைக்கிள், சூட்கேஸை கைவிட்டு இளைஞர்கள் தப்பியோட்டம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி திக்கம் பகுதியில் பயணப் பொதி (Suitcase) ஒன்றில் கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்ற...