மக்களை பகடைக்காயாக்காதீர்கள்
அரசியல்இலங்கை

“மக்களை பகடைக்காயாக்காதீர்கள்” ரணில் கடும்தொனியில் எச்சரிக்கை..!

Share

மக்களை பகடைக்காயாக்காதீர்கள்!

“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது.” இவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களை ஏறி மிதிக்கின்ற எந்தத் திட்டங்களையும் சட்டங்களையும் நாம் முன்னெடுக்க மாட்டோம். நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதியுமே திட்டங்களை நாம் முன்னெடுக்கிறோம்.

எமது ஆட்சியில் எந்தச் சட்டமும் மக்களுக்குப் பாதகமாக அமையாது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுகின்றன.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிக்காக மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றன. நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் எதிர்க்கட்சியினர் எம்முடன் கைகோக்க வேண்டும்.

இல்லையேல், தங்கள் பாதையில் செல்ல வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைவிடுத்து மக்களைப் படைக்காய்கள் ஆக்கக்கூடாது.” – என்றார்..

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...