உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்கள்
இலங்கைசெய்திகள்

கட்டாரில் மர்மமான முறையில் உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்கள்!

Share

உயிரிழந்த முல்லைத்தீவு இளைஞர்கள்!

மத்தியகிழக்கு நாடான கட்டாருக்கு வேலைக்காக சென்ற முல்லைத்தீவை சேர்ந்த இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக அதித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே மர்மமான முறையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு நாட்களாக வேலைக்கு வராத காரணத்தால் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்தபோது இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் விசுவமடு – இளங்கோபுரம் பகுதியை சேர்ந்த 21 வயது சிவகுமார் தர்சன் என்ற இளைஞன் சடலமாக காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப வறுமை காரணமாக சிவகுமார் தர்சன் வேலைக்காக கட்டாருக்கு சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் உயிரிழந்த மற்றைய இளைஞர் தொடபில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தமது குடும்ப வறுமையை போக்க வெளிநாட்டுக்கு வேலைதேடிச்சென்ற இளைஞர்கள் உயிரிழந்த சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...