அதிகரிக்கும் வன்முறை
இலங்கைசெய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறை

Share

அதிகரிக்கும் வன்முறை!

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த மே மாத இறுதி வரை பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் இவ் ஆண்டில் முறையே யாழ்ப்பாணம் – 06, சுன்னாகம் – 14 , மானிப்பாய் – 04, கோப்பாய் – 06, கொடிகாமம் – 03, சாவகச்சேரி – 06, வட்டுக்கோட்டை – 05, ஊர்காவற்துறை -07 ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்படி முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.

கடந்த வஎல்லா பதிவுகளும்ருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம் , மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 06 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, சிறுவர்களுக்திரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

18 வயதுக்குட்பட்டோரை அச்சுறுத்தல், துன்புறுத்துதல், காயப்படுத்துதல், மிரட்டுதல், சித்திரவதைக்குட்படுத்துதல், உள ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல், பாலியல் ரீதியான தொல்லை போன்ற வன்முறை சம்பவங்கள் வீடுகள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலாக 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன,

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுடன் தொடர்புடையோர் உரிய முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு பலர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் இடத்து குறித்த முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்ற சட்டநியதியின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் அனைத்திற்கும் உரிய சட்டகோவைக்கு அமைய நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் முதல் அரையாண்டு பகுதிக்குள் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்த நிலை காணப்படுகின்றது,

மேலும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின்படி யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி whatsapp குழுவினை உருவாக்கி மாணவர்களின் வரவு மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் குறித்த குழுவில் பகிர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் ஏனைய விடயங்களை உறுதிப்படுத்தும் வேலை திட்டம் ஒன்றினை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...