23 64993bf3a6011
இலங்கைசெய்திகள்

இந்து ஆலயங்களில் புத்தரும் வருவார் போல இருக்கு

Share

பல காலமாக தமிழர் தாயகங்களில் நிலவும் பெளத்த சிங்கள மயமாக்கல் முயற்சிகளுக்கு எதிராக தமிழர் சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராடிக்கொண்டிருக்கிறது.

தமிழர் தாயகங்களில் பெளத்தமயமாக்கலை உள் நுழைக்கும் முயற்சியை இலங்கை பேரினவாத அரசாங்கம் எடுத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் சில விசமத்தனமான செயல்களுக்கு தமிழர்களாகிய நாங்களும் துணை நிற்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அதாவது வவுனியா குருமன் காடு பிள்ளையார் ஆலய திருவிழாவின் போது சிலரினால் அமைக்கப்பட்டிருந்த தாக சாந்தி நிலையத்தில் காணப்பட்ட பாதாதை ஒன்று பலரை வேதனை கொள்ள வைத்துள்ளது.

இந்து பெளத்த சங்கம்

அந்த பதாதையில், “இந்து பெளத்த சங்கம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படியான பெயர்களில், இவ்வாறான பதாதைகளுடன் தாக சாந்தி நிலையங்களை அமைப்பதற்கு யார் அனுமதி கொடுத்தது, ஆலய நிர்வாகத்தில் தமிழர்கள் இருக்கின்றனரா என பலர் தமது எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

தமிழ் மண்ணை நேசிக்கும் தமிழ் உணர்வாளர்கள் நிச்சயம் இப்படி செய்ய மாட்டார்கள் எனப் பலரும் தமது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்து வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 12
இலங்கைசெய்திகள்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை சடுதியாக உயர்வு: ஒரு கிலோ கரட் ரூ.1000 வரை விற்பனை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு (Dambulla Economic Centre)...

MediaFile 3
செய்திகள்இலங்கை

களனி கங்கை ஆற்றுப்படுகையில் நீர் மட்டம் உச்சம்: ஹங்வெல்ல பகுதியில் பெரும் வெள்ள அபாயம்!

களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்ததன் காரணமாக, ஹங்வெல்ல (Hanwella) மற்றும் அதனை...

images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...