Untitled 1 29 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பௌத்த தேரர்கள்!

Share

பௌத்த தேரர்களின் செயற்பாடுகளினாலேயே வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்களுக்கு காணி அபகரிப்பு குறித்து வீண் அச்சம் ஏற்படுகின்றது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தொல்பொருளியல் என்பது சட்டத்துக்குட்பட்ட விடயமாகும். தொல்பொருள் கட்டளை சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ளது. அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும். அத்தோடு இந்த விவகாரத்தில் பௌத்த தேரர்களும், அரசியல்வாதிகளும் தலையிடுவதையும் நிறுத்த வேண்டும்.

சட்டத்துக்கமைய தொல்பொருள் திணைக்களத்துக்கு மாத்திரம் அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும். அதனை விடுத்து தொல்பொருள் திணைக்களம் ஆய்வுகளை முன்னெடுக்கும் பகுதிகளுக்குச் சென்று அங்கு சில பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக வீண் பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன. எனவே இந்த விடயத்தில் தலையிடுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

இந்து ஆலயங்களை அழிப்பதற்கோ , தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதற்கோ எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மாத்திரமே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இலாபத்தை ஈட்ட முயற்சிக்காமல் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்க வட, கிழக்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...