20230517 121433 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டுமுப்பெருந்தமிழ்விழா!

Share

யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டுமுப்பெருந்தமிழ்விழாவை நடாத்தவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(21)யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் பிற்பகல் 2.30மணிக்கு யாழ் பல்கலைக்கழக  முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
தலைமையில் முப்பெருந்தமிழ்விழா இடம்பெறவுள்ளது.

பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர்
அ.சிவபாலசுந்தரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர்
க.சுபாஷினி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர்,
தி.ஜோன் குயின்ரஸ் ,வட மாகாண
பண்பாட்டலுவல்கள் திணைக்கள
பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான
முனைவர் மு.இறைவாணி,
முனைவர் மு.பாமா உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன்
சேவைகள் செய்த பலருக்கும் விருதுகள் வழங்கிவைக்கப்படவுள்ளது.

இது தொடர்பிலான ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றபோது நிகழ்வு தொடர்பான விடயங்கள் யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் அமைப்பினரால் தெரிவிக்கப்பட்டது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...