download 1 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு!

Share

வடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தங்கி இருந்த நிலையில் குறித்த இல்லத்தில் இருந்து இந்து மத குரு ஒருவரின் உதவியுடன் மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உரிய முறையில் அழிக்கப்பட்டதாக ஆளுநர் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி சாள்ஸ் அவர்கள் எதிர்வரும் வாரம் பதவியேற்க உள்ள நிலையில் வாசஸ்தலத்தினை தூய்மையாக்கும் பணி செயலக ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டபோது

ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் உள்ள அறைகளில் போத்தல்களில் அடைக்கப்பட்ட மந்திரிக்கப்பட்ட பொருட்கள் காணப்பட்டதை அவதானித்த ஊழியர்கள் குறித்த விடயம் தொடர்பில்உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து அதிகாரிகள் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரை குறித்த விடயம் தொடர்பில் வினவிய போது அவை மந்திரிக்கப்பட்ட பொருட்கள் எனவும் அவற்றினை நிலத்தில் கிடங்குவெட்டி தாக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு இந்து மத குரு ஒருவர் வரவழைக்கப்பட்டு மந்தரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரிய முறையில் அகற்றப்பட்டு நிலத்தில்கிடங்கு வெட்டி தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது,

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...

sumanthiran mp
செய்திகள்அரசியல்இலங்கை

தேர்தல் வாக்குறுதியை மீறும் புதிய சட்டவரைவு – பயங்கரவாதத் தடைச்சட்டப் பதிலீட்டை எதிர்க்கிறார் சுமந்திரன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் (PTA) பதிலீடு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டவரைவு, முந்தைய சட்டங்களை...

25 68fa2cc1432fd
செய்திகள்இலங்கை

பாடசாலை விருது விவகாரம்: மாணவியின் பகிரங்கக் குற்றச்சாட்டை அடுத்து அதிபரிடம் அறிக்கை கோரியது கல்வி அமைச்சு!

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவி ஒருவர் மேடையில்...