download 13 1 6
இலங்கைஉலகம்செய்திகள்

கனடா இலங்கை இடையில் கல்வி, திறன் விருத்தி விவசாயத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை.!

Share
கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று (17) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்தார்இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழிநுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து இரயில்களை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா இலங்கைக்கு அளித்து வரும் உதவிகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான முன்மொழிவை கனடா அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அவர் உயர் ஸ்தானிகருக்கு விளக்கினார். தற்போது கனடாவில் வாழும் இலங்கை வர்த்தகர்களுக்கு இந்நாட்டில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை எதிர்கொள்ளும் முன்னெப்போதுமில்லாத பொருளாதார சவால்களை முறியடித்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து உயர் ஸ்தானிகர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிகபட்ச ஆதரவு வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை உத்தியோகத்தர் இந்திராணி ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...