download 1 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தீயில்  கருகிய நிலையில் சடலம் மீட்பு!

Share
யாழ்ப்பாணம் கோப்பாயில்  செவ்வாய்க்கிழமை (16)மாலை முதியவரொருவரின் சடலம் தீயில்  கருகிய நிலையில்  மீட்கப்பட்டுள்ளது.
கோப்பாய் வடக்கு கட்டுப்பலானை மரண பகுதியில் கார்த்திகேசு திருப்பதி
(திருப்பதி மாஸ்டர்) எனும் 65 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
தனிமையில் வசித்து வந்த இவரது வீட்டின் பின்பகுதியில் குப்பை எரித்த அடையாளங்களும் காணப்படுவதாக தெரியவருகின்றது.
வீட்டுக்கு சென்ற உறவினர் ஒருவர் சடலத்தை கண்டு, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் முதியவரின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் பெற்ற இவர் கோப்பாய் கிறீஸ்தவ கல்லுாரியில் நீண்ட காலம் கல்வி கற்பித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கோப்பாய் ஆலயங்கள் சிலவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவியும் சிறிது காலத்தின் முன்னரே குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...