download 14 1 5
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

Share

சருமத்தில் உள்ள தழும்புகளை நீக்கும் கோகோ பட்டர் !

சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது ‘கோகோ பட்டர்’. கோகோ விதைகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே ‘கோகோ பட்டர்’ என அழைக்கப்படுகிறது. இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன.

பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன.

இதில் இருக்கும் ‘பைட்டோ கெமிக்கல்கள்’ எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோகோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம்.

சருமத்தின் மீது கோகோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும். கோகோ பட்டரில் ஒலிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன. சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோகோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.

#Beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Vishal
சினிமாபொழுதுபோக்கு

லைகா நிறுவன கடன் விவகாரம்: ரூ.10 கோடியைச் செலுத்த அவகாசம் கோரும் நடிகர் விஷால்!

லைகா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய கடன் தொகை விவகாரத்தில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பீடு...

mandaadi soori
பொழுதுபோக்குசினிமா

75 கோடி பட்ஜெட்; படகுப் பந்தயக் களம்: சூரியின் மண்டாடி படப்பிடிப்புத் தகவல்கள்!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி....

124612405 1
பொழுதுபோக்குசினிமா

லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவிற்கு இன்று 43-வது பிறந்தநாள்! அரசன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருப்பு.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராகத் திகழும் நடிகர் சிலம்பரசன் (STR), இன்று தனது 43-வது...

w 1280h 720format jpgimgid 01jv124n1esch86bfq6dcear1dimgname rajinikanth jailer 2 1747013751854
சினிமாபொழுதுபோக்கு

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான்! ரஜினியின் நண்பராக நடிக்கும் பாலிவுட் பாட்ஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம், இந்தியத்...